Saturday, March 1, 2008

Tamil Nesan (29.02.08) Misquote our Support to Anwar

Below is the explaination done by VK Regu - Makkal Sakthi Area Coordinator regarding the news in Tamil Nesan on 29.02.08.
The Tamil Nesan have written that Makkal Sakthi have no relation with ANWAR.
It was a total FALSE news as MAKKAL SAKTHI have been a strong supporter of all opposition this general election.
Mr RK Regu, Sri Ramaji and Kannan from Makkal Sakthi and HINDRAF were on the same stage with Datuk Seri Anwar, Pn Nurul Izzah Anwar, Sdr Deo Govind Karpal Singh and RPK supporting PKR on 28.02.08 at Brickfield PKR Campaign.
Makkal Sakthi is going throughout the nation to campaign for opposition in this election after 50 years of marginalization of UMNO lead government towards Malaysian Indians.

All this mislead information by BN control media are to further confuse the Indians in Malaysia.
Makkal Sakthi also pledge all the voters to uphold the AHIMSA way during the campaigning and show the People's Power thru ballot.

Thanks,


வி.கே. ரகு அப்படி சொன்னாரா?
ஜீவி காத்தையா, Feb 29 2008, 10:02 pm
“நேற்று அன்வார் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டேன்; இன்று ஜசெக தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்” - வி.கே. ரகு
“வரும் மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் பொதுத்தேர்தலில் குறிப்பிட்ட சில தரப்பினரை அல்லது வேட்பாளர்களை ஆதரிக்கும்படியோ அல்லது அவர்களுக்கு வாக்களிக்கும்படியோ மக்கள் சக்தி இயக்கம் எவரையும் கேட்டுக் கொள்ளாது. மாறாக வாக்காளர்கள் த்ங்களது விவேகத்திற்கு ஏற்ப அவர்கள் விரும்பும் வேட்பபளர்களுக்கு வாக்களிக்களாம் என மக்கள் சக்தி இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் வி.கே. ரகு கூறினார்.” (த்மிழ் நேசன் 29.2.2008)
திரு. வி.கே. ரகு மேற்கூறியவாறு எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. “நான் நேற்று அன்வார் பிரிக்பீல்ட்ஸில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டேன். இன்று (29.2. 08) ஜசெக நட்த்தும் கூட்டத்தில் கலந்துகொள்கிறேன்”, என்று வி.கே. ரகு மலேசியாஇன்று.கோம்மிடம் கூறினார்.
மேலும், கீழ்க்கண்ட விளக்கத்தை அவர் அளித்தார்:
1) பத்துமலை திருத்தலத்தில் மார்ச் 2 ஆம் திகதி நடைபெறவிருந்த சிறப்பு பிராத்தணை குறித்து முடிவெடுக்க மட்டுமே நாங்கள் கூடினோம்.
2) சிறப்பு பிராத்தணை வேறொரு நாளுக்கு ஒத்திப்போட முடிவெடுக்கப்பட்டது.
3) அந்த ஒத்திவைப்பு பற்றி மட்டுமே செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
4) ” ‘மக்கள் சக்தி’ பெயரைப் பயன்படுத்தி வன்முறைகளா? ஏற்க முடியாது”, என்று நாங்கள் கூறவில்லை.
5) “விரும்புகின்ற வேட்பாளர்களுக்கு மக்கள் சக்தியினர் வாக்களிக்கலாம்”, என்று நாங்கள் கூறவில்லை.
6) “விரக்தியினால் குழப்பம் செய்வோர் மக்கள் சக்தி என்று கூறிக்கொள்வதா?”, என்று நாங்கள் கூறவில்லை.
7) “அன்வாருக்கும் எங்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை”‘ என்று நாங்கள் கூறவில்லை.
நாங்கள் கூறாததைக் கூறியதாகச் செய்தி வெளியிட்டிருப்பதின் உள்நோக்கம் என்ன என்பதை விழித்தெழிந்து நிற்கும் இந்தியர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்று வி.கே. ரகு கூறினார்.
நாங்கள் கூறாததைக் கூறியதாகச் சொல்வது கண்டனதுக்குறியது. வன்முறைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோமா அல்லது இல்லையா என்பதை நாங்கள்தான் கூறவேண்டும். நாங்கள் கூறியதாக மற்றவ்ர்கள் கூறுவது அசிங்கமானச் செயலாகும் என்று வி.கே. ரகு இடித்துரைத்தார்.
நாங்கள் எப்போதும் அஹிம்சையைத்தான் கடைபிடிக்கிறோம்; நம்புகிறோம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் என்றோ முடிவு செய்துவிட்டனர். அது விவேகமான முடிவாக இருக்கும் என்று அழுத்தம் திருத்தமாக வி.கே. ரகு கூறினார்.