Friday, September 12, 2008
Poems for Hindraf -உன் திசையில் உலகத் திசை
உன்
கண்களில் உண்டு
எரிமலை
உன்
கைகளில் உண்டு
வல்லமை
அகிலத்தை
அசைக்கும் சக்தி
உன்
வார்த்தைகள்
உன் பின்
இளைஞர் படை திரட்சி
உன்னிலே
வெளிப்படும் பெரும் புரட்சி
சிறை என்ன சிறை
இன்று அது உன்
சின்ன அறை..
மக்கள் சக்தி - உன்
மிகப்பெரிய அறை...
இதய அறை!