HINDRAF
Hindu Rights Action Force
No. 135-3-A, Jalan Toman 7
Kemayan Square,
70200 Seremban, Negeri Sembilan
Malaysia.. Tel : +606-7672995/6
Fax: +6-06-7672997
Email waytha@hotmail.com
Y.A.B.. DATO’ SERI ABDULLAH AHMAD BADAWI
Prime Minister of Malaysia
Block Utama,
Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya
Tel: 03 8888 8000
Fax: 03 8888 3444
Email: reduceredtape@pmo.gov.my
Email: abdullah@kdn.gov.my
28/09/2008
மேன்மைதங்கிய பிரதம மந்திரி அவைகளே1
கடந்த 08/09/08 தமிழ் நேசன் மற்றும் 19/09/08 NSTயிலும் பிரசுரிக்கப்பட்ட இராஜேஸ்வரியின் (வயது 22) துயரக்கதை யாவரும் அறிந்ததே. இன மதவாதமிக்க மலேசிய அம்னோ அரசினும் மற்றும் அரச அதிகாரிகளின் அலட்சியப் போக் கினாலும் இந்தியனாகப் பிறந்த குற்றத்திற்காக 8 மாத கர்ப்பிணி பெண்ணை எந்தவித மனிதாபிமானமோ அனுதாபமோ இல்லாமல் 11 மாதம் தடுப்புக்காவலில் வைத்து அளவில்லா துன்பங்களுக்கு ஆளாக்கினார்கள். இராஜேஸ்வரியின் கதையைப் போல் தினந்தோறும் பல ஆயிரம் இந்தியர்கள் சொல்லணாத் துயரங்களுக்கு ஆளாக்கப் பட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? அரசாங்கதாலும் அதன் அரச நிர்வாகிகளாலும் சரியான முறையில் அமுல்படுத்தப் படாத அரசுமுறை நிர்வாகம்தான்.. தினந்தோறும் அல்லல்படும் நமது மலேசிய இந்தியர்களுக்கு பின்வரும் கூற்றுக்கள் தான் மிகமுக்கிய காரணகர்த்தாக்கள்:
1) பொலிஸ் படையின் அறிவில்லாச் செயல்.
ஆறு மாதக் கர்ப்பிணியான இராஜேஸ்வரி பிரிக்பீல்ட்டில் இலங்கை அகதி என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார். அத்தருணம் அவருடைய அடையாள அட்டை அவர்வசம் இல்லை. அடையாள அட்டை இலக்கத்தையும் அவரால் ஞாபகப்படுத்தமுடியவில்லை. அத்துடன் அவருடைய மலாய் பாஷையும் அவ்வளவு சரளமாக இல்லை. இந்தக்காரணத்தால் இராஜேஸ்வரியை பொலிஸ் கைதுசெய்தது. இராஜேஸ்வரியைக் கைது செய்த பொலிஸ் அதிகாரி கேட்கவேண்டிய சாதரண கேள்விகளைக் கேட்டறிந்திருந்தால் அதாவது, படித்த பாடசாலை, அவருடைய வீட்டு விலாசம், அல்லது இருவர் இராஜேஸ்வரியின் நிலமையை உறுதிப்படுத்திருந்தால் அல்லது சாட்சிப்படுத்திருந்தால் இவருடைய கைது ஒரு தேவையற்ற அனாவசியமான செயலாகும். இன்றுள்ள மலேசியாவின் நிலமையில் பொலிஸின் பார்வையில் இந்தியர்கள் சந்தேகப்பேர்வளிகள் அத்துடன் அனாவசியமாகக் கைதுசெய்வதும், விசாரணைகள் இன்றி சிறையில் அடப்பதும் மற்றும் துன்புறுத்துவதும் வழக்கமான செயலாகிவிட்டது. பொலிஸ் அதிகாரிகள் கைரேகை பரிசோதனை மேற்கொண்டிருந்தால் இராஜேஸ்வரி ஒரு மலேசியப் பிரஜை என்பதை உடனடியாக அத்தாட்சிப்படுத்தியிருக்க முடியும்.
2) இளைய மஜிஸ்ரேட் நீதவான் நீதி வழங்கினார் (அநீதி).
தரமான, சுதந்திரமாக இயங்கும் மஜிஸ்ரேட் நீதவான் இராஜேஸ்வரியை விசார ணைக்கு உட்படுத்தப்பட்டு 2 மாதம் சிறைவாசமும் வழங்கினார். நமது எண்ணப் படி இதுதான் இன்றைய மலேசியாவில் இந்தியர்களின் நிலமை. இந்த மஜிஸ்ரேட் நீதவானின் தன்னிட்சையான தீர்ப்பில் பொலிஸ்காரர்களுக்கு கைரேகையோ அல்லது இராஜேஸ்வரியின் நிலமையை உறுதிப்படுத்தவோ எந்த ஒரு கட்டளை யையும் பிறப்பிக்கப்படவில்லை. அத்துடன் தகுந்த விசாரணை நடத்தப்படாமல் இந்த மஜிஸ்ரேட் நீதவான் சீக்கிரமாக இராஜேஸ்வரியை சிறைக்கு அனுப்பி விட்டார். ஏனெனில் இந்த நீதவான்கள் பொலிஸ்காரர்களுடன் மிகவும் நெருக்க மானவர்கள் எனப் பெயர்பெற்றவர்கள். ஒரு நீதிபதி தகுந்த நீதி வழங்குவதற்கும் அதாவது ஒருவரை சிறைக்கு அனுப்புவதற்கும் குறைந்தது 7 வருட சேவை இந்த நீதித்துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
3) மாவட்டரீதியில் சட்ட உதவியில்லை.
மாவட்டரீதியில் சட்ட உதவி வசதிகள் இருக்குமேயானால் இராஜேஸ்வரியைப் போன்ற ஆயிராமாய் தினந்தோறும் அல்லாலப்படும் நமது இந்திய்ர்களுக்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைக்கும். 2008/2009 வரவு செலவு திட்டத்தில் RM 207.93 பில்லியனில் எந்தவொரு ஒதுக்கீடும் வழங்கப் படவில்லை. தாய்லாந்தில் சட்ட உதவி வழக்கறிஞ்சர்களுக்கு பொலிஸ் அலுவலகத்தில் தனி அறை வழங்கி நீதியை உறுதி செய்கின்றனர்.
4) தரமான அரசுதரப்பு வழக்கறிஞ்சர்கள் இல்லை.
51 வருட சுதந்திரத்திற்குப் பின்னரும் சட்டரீதியில் திறமையுடைய இளைய பொலிஸ் அதிகாரிதான் குற்றவியல் விசாரணைகளை மஜிஸ்ரேட் நீதிமன்றங்களில் விசாரணை நடத்துகின்றார்கள். தரமான அரசுதரப்பு வழக்கறிஞ்சர்கள் இருப்பேராயனால் இராஜேஸ்வரிக்கு கைரேகை அடையாளம் எடுப்பதற்கும் அவரின் குடும்ப விபரங்களும் பெறுவதற்கு இந்த தரமான அரசுதரப்பு வழக்கறிஞ்சர்கள் உத்தரவிட்டிருப்பார்கள். ஆனால் இந்த மஜிஸ்ரேட் நீதிமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் எந்த ஒரு ஒதுகீடும் வழங்கப்படவில்லை. கைது செய்வதும், விசாரணை செய்வதும் தண்டணை வழங்குவதும் நீதிமன்றத்தில் வாதாடுவதும் சிறை அதிகாரிகளாகவும் பொலிஸ் அதிகாரிகள் திகழ்கின்றனர்.
5) சிறைச்சாலைகளும் சமூக நலன் இலாக்காக்களும்
சிறைச்சாலைக அதிகாரிகளும் சமூக நலன் இலாக்கா அதிகாரிகளும் தங்களிடைய அடிப்படைக் கடமைகளையும் மனிதாபிமானத்துடன் நடந்திருப் பேரேயானால் இராஜேஸ்வரி 2 மாத சிறைவாசமும் மேலும் 9 மாத தடுப்புக் காவலிலும் அவதிப்பட்டிருக்கமாட்டார். கடவுள் வசத்தால் இராஜேஸ்வரி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. சிறைச்சாலைகளும் சமூக நலன் இலாக்காக்களும் நீதி வழங்கத்தவறிவிட்டனர்.
6) இந்திய அரசுசார்பற்ற இயக்கம்
தனது சிறையில் பெற்ற குழந்தையை மருத்துவத்திற்கு கொண்டு சென்ற சமயம் இந்திய அரசுசார்பற்ற இயக்கத்தின் உறுப்பினரைச் சந்தித்ததின் பலன் இராஜேஸ்வரியின் பிற்ப்புச்சான்றிதழ் மற்றும் புத்திராஜய தேசிய பதிவிலாகாவில் உறிதிப் பாரம் போன்றவற்றால் இராஜேஸ்வரியினதும் அவரின் 8 மாதக் கை குழந்தையயினதும் விடுதலைக்கு வழிவகுத்தது. இந்தக் குழந்தைக்கும் பிறப்புச் சான்றிதள் வழங்கப்பட்டுள்ளதா என்பது சந்தேகம்தான். ஏனெனில் இதே நிலமை இன்னும் 20 வருடத்தில் இந்தக் குழந்தைக்கும் நிகழும். இந்த சுற்று நமது இந்தியர்களுக்கு நடந்து கொண்டுதான் இருக்கும்.
7) சகல இனக் கலாச்சாரம்.
இதே இராஜேஸ்வரி ஒரு வெளிநாட்டுப் பிரஜையாக இருந்திருந்தால் ஏதவது அரசு சார்பற்ற இயக்கங்களோ ஜனநாகவாதிகளோ, எதிர்கட்சிகளோ, பத்திடிகைகளோ முன்னோடிகளாகத் திகழ்ந்திருப்பார்கள். ஆனால் மலேசிய இந்தியர்களுக்கு இந்தப் பாக்கியம் இல்லை.
8) 8 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு எந்த ஒரு மனிதாபிமானமும் வழங்கப்படவில்லை
இந்த 8 மாத இந்தியக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எந்த ஒரு மனிதாபிமானமும் வழங்காத மலேசிய அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் எவ்வாறு சக இந்திய சமுதாயத்திற்கு வழங்குவார்கள்?
9) அடிப்படைக்கல்வி நிராகரிப்பு
இராஜேஸ்வரிக்கு அடிப்படைக்கல்வி நிராகரிக்கப்பட்டதால் அவருடைய
மலாய் பாஷை சரளமாக இல்லை. இது இராஜேஸ்வரியின் குற்றமா? அல்லது
இன மத வெறி பிடித்த மலேசிய அரசாங்கத்தின் குற்றமா? இந்நிலையில்
எவ்வாறு படிப்பில் மலாய்காரர்போல் முன்னேறமுடியும்?
10) தீர்ப்பு
இது ஒரு தனிப்பட்டவோ புறநீங்கலான நிலமையில்லை. அம்னோ அரசாங்கத்தாலும் அதன் இன மதவெறிக்கொள்கைகளும் அதை சரிவர அமுல்படுத்தப்படாத சட்ட திட்டங்களாலும் அவதிப்படும் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் தினந்தோறும் குமுறலகளின் எத்ரொலி. மலேசிய மனித உரிமைக்குளு ஆணையாளர் டத்தோ காலிட் இப்ராகிமின் உருதியான கருத்துப்படி, 12க்கும் 17வயதிற்கும் உட்பட்ட எத்தனையோ சிறார்கள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 40,000 இந்திய சிறார்கள் பிறப்புப்பத்திரமோ அடையாள அட்டையோ இல்லாமல் சிலங்கூர் மாவட்டத்தில் மட்டும் அவதிப்படுகின்றார்கள். இது இந்தியர்களுக்கு மட்டும் ஏன் நடக்கின்றது? ஏன் இது போன்ற அநீதிகள் மலாய்காரர்களூக்கோ, சீனர்களுக்கோ, பழங்குடியினருக்கோ, கடசான்காரர்களுக்கோ அல்லது இபான்களுக்கோ நடப்பதில்லை? ஏனெனில் இந்தியர்கள் இந்நாட்டு அபிவிருத்திகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.. இந்தியர்களின் முன்னேற்றத்தில் இந்த மலேசிய அரசாங்கம் எதுவித அக்கரையோ ஆற்றலோ கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.
இந்த இராஜேஸ்வரிக்கு இந்த அரசாங்கதால் ஏற்படுத்தப்பட்ட அவல நிலைக்கு மன்னிப்பும் RM 500,000.00 நஷ்ட ஈடாக வழங்கப்படவேண்டும் என இந்த இந்து உரிமை நடவடிக்கைக் குழு வேண்டிக்கொள்கின்றது
நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
…………………………………..
பொ. வேதமூர்த்தி
[இந்த இந்து உரிமை நடவடிக்கைக் குழு தலைவர்]
[இலண்டனில் இருந்து]